பாரதியார் பிறந்தநாள் விழா பள்ளிகளில் கொண்டாட உத்தரவு
பாரதியார் பிறந்தநாள் விழா பள்ளிகளில் கொண்டாட உத்தரவு
ADDED : டிச 08, 2025 02:22 AM
சென்னை:'பாரதியார் பிறந்தநாள் விழாவை, வரும், 11ம் தேதி வரை கொண்டாடலாம்' என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய கல்வித்துறை செயலர், இந்திய மொழிகளின் திருவிழாவை, நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் நடத்த உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு, அதை பாரதியார் பிறந்தநாள் விழாவுடன் இணைத்து கொண்டாட, பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தாய் மொழியிலேயே, இயற்கை, சுற்றுச்சூழல், பண்பாடு, உணவு, கலாசாரம் உள்ளிட்ட கருப்பொருள்கள் குறித்து பேசுவது, உரையாடுவது, அந்த மொழி சொற்களின் பொருளை, மற்ற மொழி பேசும் மாணவர்களுக்கு விளக்குவது உள்ளிட்ட கற்றல் தொடர்பான போட்டியாக நடத்த வேண்டும்.
பாரதியார் குறித்து கதை கூறல், நாடகம் நடித்தல் உள்ளிட்ட போட்டிகளையும், வரும், 11ம் தேதி வரை நடத்தலாம் என, பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

