sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்; கிடைத்தது 4 பேருக்கு வாழ்வு

/

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்; கிடைத்தது 4 பேருக்கு வாழ்வு

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்; கிடைத்தது 4 பேருக்கு வாழ்வு

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்; கிடைத்தது 4 பேருக்கு வாழ்வு


ADDED : மார் 12, 2026 07:38 PM

Google News

ADDED : மார் 12, 2026 07:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

தேனி ஆண்டிபட்டி ஆட்டுப்பாறையைச் சேர்ந்த சங்கிலி மனைவி பாண்டியம்மாள் 40. இவர் தேனியில் டூவீலரில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மார்ச் 10 அதிகாலையில் மூளைச்சாவு நிலையை அடைந்தார்.

கணவர் சங்கிலி, மனைவியின் உடல் உறுப்புகளை தானமாக தர முன்வந்தார். பாண்டியம்மாளின் கல்லீரல் எடுக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனை, மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. இதனால் நான்கு பேருக்கும் வாழ்வு கிடைத்துள்ளது.






      Dinamalar
      Follow us