'அண்ணாமலை சட்டசபைக்குள் நுழைவது எங்கள் விருப்பம்'
'அண்ணாமலை சட்டசபைக்குள் நுழைவது எங்கள் விருப்பம்'
ADDED : பிப் 06, 2026 05:14 AM

கோவை: ''-அண்ணாமலை சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்பது எங்களது விருப்பம்; அது நிறைவேறும்,'' என்று -பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.
பா.ஜ.,எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன் கோவை சங்கனூரிலுள்ள திருமண மண்டபத்தில் பிரதமர் மோடி முகாமை துவக்கி வைத்து அளித்த பேட்டி:
கோவை வடக்கில் போட்டியிடுவது யார் என்பதை தலைமை முடிவெடுக்கும். அ.தி.மு.க., வின் மகளிர் மானிய ஸ்கூட்டர் திட்டம், தாலிக்கு தங்கம், என்று மகளிர் திட்டங்கள் அனைத்தையும் தி.மு.க., அரசு நிறுத்திவிட்டது. ஆட்சி முடியும் நேரத்தில் இலவச லேப்டாப்களை சிலருக்கு வழங்கியுள்ளனர்.
முதல்வர் மக்கள் கனவுகளை நிறைவேற்றுவதாக கூறி வரும் சூழலில், மக்களின் கனவு தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்புவது தான். அது நிச்சயம் நடக்கும். அண்ணாமலை சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்பது எங்களது விருப்பம் அது நிறைவேறும்.
கமல் பேசுவது புரியாததால் தான் கோவை மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பினார்கள். அது தெரியாமல் அவரை தி.மு.க., டில்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.இவ்வாறு வானதி கூறினார்.
அவருடன் தமிழக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

