sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவேகானந்தர் - திருவள்ளுவர் சிலைக்கு இணைப்புப்பாலம் கட்ட நடவடிக்கை

/

விவேகானந்தர் - திருவள்ளுவர் சிலைக்கு இணைப்புப்பாலம் கட்ட நடவடிக்கை

விவேகானந்தர் - திருவள்ளுவர் சிலைக்கு இணைப்புப்பாலம் கட்ட நடவடிக்கை

விவேகானந்தர் - திருவள்ளுவர் சிலைக்கு இணைப்புப்பாலம் கட்ட நடவடிக்கை


ADDED : ஜூலை 24, 2011 11:19 PM

Google News

ADDED : ஜூலை 24, 2011 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கிடையே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுற்றுலா வளர்ச்சித்துறை ஆணையர் மோகன்தாஸ் கூறினார்.

கன்னியாகுமரியில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், காட்சி கோபுரம் முதல், சிலுவை நகர் வரை அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்த பின், மோகன்தாஸ், நிருபர்களிடம் கூறியதாவது: சர்வதேச சுற்றுலா மையமாக விளங்கும் கன்னியாகுமரியில், மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடக்கின்றன. விவேகானந்தர்பாறை, திருவள்ளுவர் சிலைக்கு, படகுபோக்குவரத்து நடைபெறுகிறது. கடல் சீற்றத்தால், பல நேரங்களில், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால், சுற்றலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைத்து பாலம் அமைத்தால், இப்பிரச்னைக்கு முடிவு ஏற்பட்டு விடும். இதற்கு வசதியாக, பாலம் கட்டும் பணி பற்றி, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் துவங்கப்படும். இவ்வாறு மோகன்தாஸ் கூறினார்.






      Dinamalar
      Follow us