sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.3 ஆயிரம் கோடி வக்ப் சொத்து வைத்திருக்கும் ஓவைசி; தமிழ் மாநில முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு

/

ரூ.3 ஆயிரம் கோடி வக்ப் சொத்து வைத்திருக்கும் ஓவைசி; தமிழ் மாநில முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு

ரூ.3 ஆயிரம் கோடி வக்ப் சொத்து வைத்திருக்கும் ஓவைசி; தமிழ் மாநில முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு

ரூ.3 ஆயிரம் கோடி வக்ப் சொத்து வைத்திருக்கும் ஓவைசி; தமிழ் மாநில முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு

31


ADDED : ஏப் 07, 2025 02:10 PM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:10 PM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''வக்ப் வாரியத்துக்கு சொந்தமான ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் தெலுங்கானா எம்.பி., ஓவைசி, தெலுங்குப்படங்களில் வரும் காட்சிகளை போல, பார்லிமென்டில் நடிக்கிறார்,'' என்று, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறினார்.



இது குறித்து ஷேக் தாவூத் கூறியதாவது: வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை தமிழ் மாநில முஸ்லிம் லீக் முழுமையாக வரவேற்கிறது. அதில் 5 ஆண்டுகளுக்கு, ஒரு இஸ்லாமியராக வேற்று மதத்தில் இருந்து மாறினால், முதலில் அவர்கள் சொல்வது, 5 ஆண்டுகள் இஸ்லாமிய நடை முறைகளை கடைப்பிடித்து இருந்தால் தன்னுடைய சொத்தை வக்ப் வாரியத்திற்கு எழுதலாம் என சொல்கிறார்கள்.

இந்த சட்டம் முழுமையாக நமது கைக்கு வரவில்லை, முழுமையாக வந்தால் தான் முழு விபரம் தெரிய வரும். தன் பெயரில் இல்லாத சொத்தை வக்ப் வாரியத்திற்கு எழுத முடியாது என சொல்கிறார்கள். வக்ப் வாரியத்தில் பெண்கள் இருவரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்கிறார்கள். வக்ப் வாரியத்திற்கு எழுதி வைத்த சொத்துகள் விபரத்தை 90 நாட்களில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என சொல்கிறார்கள்.

இதுவரைக்கும் பார்த்தால் யார் வக்ப் வாரியத்திற்கு சொத்துக்கள் எழுதி வைத்து இருக்கிறார்கள் என்பது தெரியாது. பெரிய மர்மமாக இருக்கிறது. அண்ணா அறிவாலயம் வக்ப் வாரியத்திற்கு உரியது. தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கிரவுண்ட் வக்ப் வாரியத்திற்கு கீழ் வருகிறது. திருச்சியில் இருக்கும் அறிவாலயம், தி.மு.க., கட்டி இருப்பது வக்ப் வாரியத்திற்கு சொத்தமானது என்று நம் எல்லோருக்கும் தெரியும். கொஞ்சம் நாட்களுக்கு முன் தான் எல்லாம் பக்காவா தெரியவந்தது.

நாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு மேல் வக்ப் வாரியத்துக்கு சொத்துக்கள் உள்ளன. இவற்றில் 10 சதவீதம் வருமானம் வந்தால் கூட, ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வர வேண்டும்.இந்த சொத்துக்களை யார் வைத்திருக்கின்றனர், யார் அந்த வருமானத்தை அனுபவிக்கின்றனர் என்று வெள்ளை அறிக்கை வேண்டும். வக்ப் சொத்துக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

ஓவைசியிடம் ரூ.3 ஆயிரம் கோடி

இந்த சட்டத்தை இஸ்லாமியர்கள் நிறைய பேர் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒரு குறிப்பாக சொல்கிறேன். ஓவைசி ஒருத்தர் என்று ஹைதராபாத் காரர் இருக்கிறார். உங்களுக்கு எல்லாம் தெரியும். அவர் எம்.பி.,யாக இருக்கிறார். அவர் சொல்கிறார் என் நெஞ்சில் சுடுங்கள், இப்பொழுதே சுடுங்கள். அவர் தெலுங்கில் இருந்து முஸ்லீமாக மாறியவர்.

அவர் கொடுக்கும் ஆக்ஷன், நடிப்பு எல்லாம் பார்க்கும் போது, தெலுங்கு படத்தை நான் பார்த்த மாதிரி இருக்கிறது. பார்லிமென்டில் யாராவது துப்பாக்கி கொண்டு வந்து சுடுவார்களா? பேசி முடித்து விட்டு, வெளியே வந்து பி.ஜே.பி., ஆட்களோடு ஒன்னா உட்கார்ந்து டீ, காபி சாப்பிட்டுவிட்டு பாய், பாய் என்கிறார். அவர் வக்ப் வாரியத்திற்கு சொந்தமான ரூ.3 ஆயிரம் கோடி சொத்தை வைத்து இருப்பதாக தகவல் இருக்கிறது. அவர் பெயரில் நிறைய ஹோட்டல், கல்லூரி இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் பேட்டியை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்யை கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us