தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்தில் செப்., 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய அனுமதி

 தமிழகத்தில் செப்., 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய அனுமதி

 தமிழகத்தில் செப்., 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய அனுமதி


ADDED : ஆக 28, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 06:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் வரும், 2026 - 27ம் ஆண்டு பருவ நெல் கொள்முதலை, முன்கூட்டியே செப்.,1ம் தேதி முதல் தொடங்க, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து, மத்திய அரசின், இந்திய உணவு கழகம் சார்பில், நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொள்கிறது.

இதற்காக விவசாயிகளுக்கு, 100 கிலோ எடை உடைய, குவிண்டால் நெல்லுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையை, மத்திய அரசு வழங்குகிறது. அதனுடன், தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது.

நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்., முதல் செப்., வரை, நெல் கொள்முதல் பருவம் இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த தி.மு.க., ஆட்சியில், ஒரு மாதம் முன்கூட்டியே, அதாவது, செப்.,1ம் தேதி முதல் நெல் கொள்முதல் சீசன் தொடங்கப்பட்டது.

இதை த.வெ.க., அரசும் பின்பற்றி, வரும் 2026 - 27 பருவ நெல் கொள்முதலை, செப்.,1ம் தேதி தொடங்க அனுமதி கேட்டு, மத்திய உணவுத் துறைக்கு, தமிழக உணவுத் துறை செயலர் அமுதா, இம்மாதம், 8ம் தேதி கடிதம் எழுதினார்.

இதை பரிசீலித்த மத்திய அரசு, வரும் கொள்முதல் பருவ காலத்தை, செப்.,1ம் தேதி முதல் தொடங்க, நேற்று அனுமதி அளித்துள்ளார்.

கொள்முதல் அளவு மற் றும் அரவை செய்து, அரிசி ஒப்படைக்கும் காலம் ஆகியவற்றை, வரும் 1ம் தேதி டில்லியில் நடக்கும், அனைத்து மாநில உணவுத் துறை செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us