ADDED : நவ 24, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் - மதுரை ரயில்வே வழித்தடத்தில் அம்பாத்துரை அருகே தண்டவாளத்தில் ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
ரயில்வே போலீசார் விசாரணையில் இறந்தவர் திருநெல்வேலி மேலபாட்டம் அருகேவுள்ள திருமலைக்கொழுந்துபுரம் பெயிண்டர் புஷ்பராஜ் 27, என தெரிந்தது. திருநெல்வேலியிலிருந்து விழுப்புரத்திற்கு பெயிண்டிங் வேலைக்கு செல்வதற்காக முன்பதிவில்லா டிக்கெட் எடுத்த புஷ்பராஜ், செந்தூர் அதிவிரைவு ரயிலின் பின்னால் உள்ள பொதுப்பெட்டியில் பயணித்துள்ளார். அதிகாலை 2:00 மணியளவில் அவர் திண்டுக்கல் அருகே வரும்போது, ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

