பழநி கோயில்: வர்த்தக பயன்பாட்டிற்கு தடை: ஐகோர்ட் உத்தரவு
பழநி கோயில்: வர்த்தக பயன்பாட்டிற்கு தடை: ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஜன 09, 2024 05:49 PM
ADDED : ஜன 09, 2024 05:38 PM

மதுரை: பழநி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என்று ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பழநியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற போவதாக ஜன. 5ல் அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது. இதை கண்காணிக்க ஓய்வு நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் 1000க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், '' பழநி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். சோதனை சாவடி அமைத்து கண்காணிக்க வேண்டும்'' என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.