பழனி கோபுரம் சேதம் ஊழலை காட்டுகிறது * ஹெச்.ராஜா தகவல்
பழனி கோபுரம் சேதம் ஊழலை காட்டுகிறது * ஹெச்.ராஜா தகவல்
ADDED : அக் 02, 2024 09:12 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா அளித்த பேட்டி:
கோவில் புனரமைப்பு செய்வது, கட்டுமானங்கள் தரமற்ற முறையில் உள்ளது. அதனால் தான் பழனி கோவில் கோபுரத்தில் மேற்பகுதி சிதலமடைந்துள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை வாயிலாக புனரமைப்பு செய்யப்பட்ட கோவில்களை கள ஆய்வு செய்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோவில் புனரமைப்பு பணிகளில் பெரும்பாலும் தமிழகத்தில் ஊழல் நடந்துள்ளது.
தமிழகத்தில் கல்லுாரிகளில் போலியான ஆதார் கார்டுகளை கொடுத்து, ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லுாரிகளில் முறைகேடாக பணியாற்றியது தெரியவந்துள்ளது. தற்போது, பொன்முடி அந்தத் துறையின் அமைச்சராக இல்லாத சூழலில் முதல்வர் முறையாக விசாரணை செய்து, அது என்ன முறைகேடு என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் ஸ்டாலினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மூலவர் என கூறியிருந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ''இனிமேல் ஸ்டாலின் எங்கேயும் சுற்றுப்பயணம் செல்ல மாட்டார். ஏனென்றால், ஸ்டாலின் மூலவர். உதயநிதி உற்சவர் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியே கூறிவிட்டார். எனவே, மூலவர் ஸ்டாலின் இனி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள மாட்டார் என்று சட்டத்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டு விட்டார்,'' என்றார்.

