ADDED : பிப் 23, 2024 02:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர்.
பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற பிறகும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 48 ஆண்டுகளாக பால்காவடி, தீர்த்த காவடி, மயில் காவடி எடுத்து வருகின்றனர். நேற்று (பிப்.22) அவர்கள் பழநி வந்தனர். சண்முக நதி அருகே ராட்சத கிரேனில் 9 பக்தர்கள் பறவைக்காவடியில் தொங்கியபடியும், 10 பேர் 15 அடி நீள அலகு குத்தியும் கிரி வீதியில் வலம் வந்தனர். அலகு குத்தி வந்தவர்களிடம் பலரும் குழந்தைகளை கொடுத்து ஆசி பெற்றனர்.