sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பதிலுரையை கவனித்திருந்தால் பழனிசாமிக்கு புரிந்திருக்கும்!'

/

'பதிலுரையை கவனித்திருந்தால் பழனிசாமிக்கு புரிந்திருக்கும்!'

'பதிலுரையை கவனித்திருந்தால் பழனிசாமிக்கு புரிந்திருக்கும்!'

'பதிலுரையை கவனித்திருந்தால் பழனிசாமிக்கு புரிந்திருக்கும்!'


ADDED : பிப் 15, 2024 10:55 PM

Google News

ADDED : பிப் 15, 2024 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கை:

'தி.மு.க., ஆட்சியில் நிறைய குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை அறிக்கைகள் அளித்தனவா; அந்த குழுக்களை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேட்டுள்ளார்.

அந்த குழுக்களின் அறிக்கைகள் எல்லாம் அரசின் செயல்பாட்டை, நிதிநிலையை மேம்படுத்த அமைக்கப்பட்டவை; நிர்வாகம் தொடர்பானவை. அவற்றை பொதுப் பார்வைக்கு வைக்க வேண்டியதில்லை என்பது, முதல்வராக இருந்தவருக்கு தெரியாதா?

'ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்றனர். அதற்காக என்ன உத்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என சொல்லவில்லை' என, பழனிசாமி புலம்பியிருக்கிறார்.

தமிழகத்தை 2030ம் ஆண்டிற்குள், 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை வைத்து செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இலக்கை எட்ட, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், முதல்வர் அளித்த பதிலுரையை கொஞ்சமாவது கவனித்திருந்தால், 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் என்னென்ன என்பது பழனிசாமிக்கு தெரிந்திருக்கும்.

இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us