ADDED : டிச 19, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பா.ஜ., அரசு. 'விபி-ஜி ராம்-ஜி' திட்டத்தில், 125 நாள் வேலை என்பது ஏமாற்று வேலை. 100 நாள் வேலை என சட்டம் இருந்தபோதே, 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. தற்போது, அதிகாரிகள் விரும்பினால், வேலை வழங்கலாம் என விதிகள் மாற்றப்பட்ட பின், ஓரிரு நாள் வேலை கிடைப்பதே அரிதாகி விடும்.
திட்டச் செலவில், 40 சதவீதத்தை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியை சந்திக்கும் மாநில அரசுகளுக்கு தரப்படும் தண்டனை. பெண்கள், ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு, பழனிசாமி வரவேற்பு பத்திரம் வாசிப்பது, மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்.
- ஸ்டாலின்
தமிழக முதல்வர், தி.மு.க.,

