ADDED : அக் 26, 2024 07:05 PM
அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, 'மகளிர் உரிமைத் தொகையை, தற்போதைய அரசு கடன் வாங்கித்தான், ஒவ்வொரு மாதமும் வழங்குகிறது என, எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டி உள்ளாரே' என, முதல்வரிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில்:
பழனிசாமி எதையாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார். அவருக்கு வேறு வேலையே கிடையாது. அவர் பெயர் பத்திரிகையில் வர வேண்டும்; முகம் அடிக்கடி 'டிவி'யில் வர வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, நிதி ஒதுக்க, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து அறிவித்துள்ளனர். அந்த நிதியை விரைவில் வழங்க வேண்டும் என, மத்திய அமைச்சர் மனோகர் லாலிடம் சொல்லி இருக்கிறோம்.
இவ்வாறு, முதல்வர் கூறினார்.