ADDED : ஆக 12, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரசாரம் ஒத்திவைப்பு
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, வரும் 23ம் தேதி மேற்கொள்ளவிருந்த பிரசாரப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ கத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதையொட்டி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், கடந்த ஜூலை 7ம் தேதி முதல், சட்டசபை தொகுதி வாரியாக, பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு கட்ட பயணத்தை நிறைவு செய்த நிலையில், மூன்றாம் கட்ட பயணத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் நேற்று துவக்கினார்.
இந்த பயணத்தை, வரும் 23ம் தேதி சோழிங்கநல்லுார், திருப்போரூர் தொகுதிகளில் முடிப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் சோழிங்க ந ல்லுார், திருப்போரூர் பிரசார பயணம் தள்ளிவைக்கப்படுவதாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

