ADDED : நவ 08, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
'எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஜி.எஸ்.டி.,யை அரசே செலுத்தும்' என, கடந்த செப்டம்பர் 15ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை ஜி.எஸ்.டி.,க்கான நிதியை, தமிழக அரசு விடுவிக்கவில்லை.
இதனால் தொகுதி மேம்பாட்டு நிதியில், முடிவடைந்த பணிகளுக்கான நிதியை விடுவிக்க முடியாமல், கலெக்டர்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக நிதியை முதல்வர் ஸ்டாலின் விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

