பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா ஒத்திகை: பிரதமர் மோடி 12 நிமிடம் பார்வையிடுகிறார்
பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா ஒத்திகை: பிரதமர் மோடி 12 நிமிடம் பார்வையிடுகிறார்
ADDED : மார் 30, 2025 06:27 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கான ஒத்திகை நடந்தது. விழாவின் போது பிரதமர் மோடி தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்றபடி 12 நிமிடம் பார்வையிடுகிறார்.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அன்று தாம்பரம் டூ ராமேஸ்வரம் புதிய ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். மேலும் ரயில் துாக்கு பாலம் திறந்ததும் இந்திய கடலோர காவல்படை கப்பல் கடந்து செல்வதையும் பார்வையிடுகிறார்.
இந்த திறப்பு விழாவுக்காக நேற்று ரயில் இன்ஜின் பெட்டியுடன் புதிய பாலத்தில் சோதனை ஓட்டமும், அதன் பின் துாக்கு பாலம் திறந்ததும் இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் கடந்து செல்லும் ஒத்திகை நிகழ்ச்சி 12 நிமிடம் நடந்தது. இதனை பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைக்கப்படும் மேடையில் நின்றபடி பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.
நேற்று நடந்த ஒத்திகையை சாலை பாலத்தில் அமைத்த தற்காலிக மேடையில் நின்றபடி மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா, கடலோர காவல் படை, ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டனர்.