ADDED : பிப் 03, 2024 12:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மெரினாவில் சசிகலாவும் , முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் , நேருக்குநேர் நலம் விசாரித்து கொண்டனர்.
அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்த வந்தார். இந்நேரத்தில் இங்கு சசிகலாவும் வந்தார். நேருக்குநேர் சந்தித்து கொண்ட இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
தொடர்ந்து சசிகலா நிருபர்களிடம் பேசுகையில்;
தமிழக மக்கள் எங்கள் பக்கம். அனைவரும் அதிமுக.,வைச் சேர்ந்தவர்கள் தான். மக்கள் பிரச்னைகளை நான் தான் பேசுகிறேன். அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.

