sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பராசக்தி பட விவகாரம்; ஆங்கில ஊடக விவாதத்தில் அசிங்கப்பட்டது திமுக

/

பராசக்தி பட விவகாரம்; ஆங்கில ஊடக விவாதத்தில் அசிங்கப்பட்டது திமுக

பராசக்தி பட விவகாரம்; ஆங்கில ஊடக விவாதத்தில் அசிங்கப்பட்டது திமுக

பராசக்தி பட விவகாரம்; ஆங்கில ஊடக விவாதத்தில் அசிங்கப்பட்டது திமுக

70


UPDATED : பிப் 02, 2026 10:31 PM

ADDED : பிப் 02, 2026 02:00 PM

Google News

70

UPDATED : பிப் 02, 2026 10:31 PM ADDED : பிப் 02, 2026 02:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது சிறப்பு நிருபர்

ஹிந்தி திணிப்பு பற்றி ஆங்கில ஊடக விவாதத்தில் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர், பாஜ பிரதிநிதி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கேலிச்சிரிப்பு சிரித்து அசிங்கப்பட்ட வீடியோ, இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

2026-27 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 01) பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தொடர்பாக டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலில் விவாதம் நடந்தது.

இந்த விவாத நிகழ்ச்சியில் திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாத்துரை, பாஜ தேசிய தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். விவாதத்தின் போது, விவாத தலைப்புக்கு தொடர்பு இல்லாமல், தமிழகத்தில் நடந்த மொழிப்போர், ஹிந்தி திணிப்பு தொடர்பாக, 'பராசக்தி' படம் எடுக்கப்பட்டதாக திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாத்துரை பேசினார்.

அப்போது குறுக்கிட்ட பாஜ தேசிய தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, 'இந்த போராட்டம் யார் ஆட்சிக்காலத்தில் நடந்தது' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, 'காங்கிரஸ்' என திமுக செய்தித்தொடர்பாளர் பதில் அளித்தார்.

அடுத்த வினாடியே, 'இப்போது நீங்கள் யாருடன் கூட்டணியில் இருக்கிறீர்கள்...' என்று பாஜ செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பினார். கேள்வியின் நோக்கத்தை புரிந்து கொண்டு, திமுக பிரதிநிதி எதுவும் பேசாமல் இருந்த நிலையில், ''காங்கிரசுடன் தானே கூட்டணி' என்று கூறினார். பாஜ., செய்தி தொடர்பாளர்.

இதைக்கேட்டதும், நெறியாளர் உட்பட விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வெடிச்சிரிப்பு சிரித்து தங்கள் ரியாக்சனை வெளிப்படுத்தினர். இதைப்பார்த்து பதில் அளிக்க முடியாமல் திணறிய திமுக செய்தித்தொடர்பாளர், மிமிக்ரி செய்வது போல கேலிச்சிரிப்பு சிரித்து நிலைமையை சமாளித்தார்.

திமுக செய்தித் தொடர்பாளர் பதில் சொல்ல முடியாமல் கேலிச்சிரிப்பு சிரித்து அசிங்கப்பட்டதை கவனித்த நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றனர்.

அவற்றில் சில பதிவுகள்:

* சமாளிக்க முடியாவிட்டால் பைத்தியம் போல் நடித்து தப்பி விடு; திமுக ஊடக கொள்கை 420.

* சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு 200 பொற்காசுகள் வழங்கப்படும். அந்த சிரிப்பு பயங்கரம் அண்ணே.

* Melting Point Saravanan finally reached his Boiling Point

* Best Video meme of the year 2026.. And the credit goes to @saravofcl

* கேள்வி கேட்டு அவங்கள் தான் அசிங்கப்படுத்துகிறார்கள் என்றால் நீயும் சிரித்து அசிங்கபடுகிறாயே!

* உங்களுக்கு சாதகமான தொலைக்காட்சியில் விவாதம் வைத்து திமுக சார்ந்த ஆட்களை வைத்து கொண்டு நீங்கள் பேசும் போது, மற்ற கட்சிகளுக்கு எப்படி இருக்குமோ, அதுதான் நேஷனல் மீடியாவில் உங்களுக்கு நடக்கிறது. இவ்வாறு திமுக செய்தித் தொடர்பாளரை இணையத்தில் பயனர்கள் விமர்சித்து இருக்கின்றனர்.

அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ டிரெண்டிங்கில் இருக்கிறது.

இது குறித்து உங்களது கருத்துக்களை கமென்ட் பகுதியில் எழுதுங்கள்.






      Dinamalar
      Follow us