sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

6 மாத பெண் குழந்தைக்கு நோய் பாதிப்பு ரூ.16 கோடிக்கு உதவி தேடும் பெற்றோர்

/

6 மாத பெண் குழந்தைக்கு நோய் பாதிப்பு ரூ.16 கோடிக்கு உதவி தேடும் பெற்றோர்

6 மாத பெண் குழந்தைக்கு நோய் பாதிப்பு ரூ.16 கோடிக்கு உதவி தேடும் பெற்றோர்

6 மாத பெண் குழந்தைக்கு நோய் பாதிப்பு ரூ.16 கோடிக்கு உதவி தேடும் பெற்றோர்


ADDED : ஜன 28, 2024 01:26 AM

Google News

ADDED : ஜன 28, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே எட்டிகுட்டப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே பிரகாஷ் நகர் மெயின் பகுதியில், வாடகை வீட்டில் தங்கி, பெங்களூரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுகிறார்.

இவர் மனைவி லாவண்யா, 31. இவர்களுக்கு பிரனேஷ்வரன், 7, என்ற மகன் மற்றும் ஷத்விகா என்ற, 6 மாத பெண் குழந்தை உள்ளனர்.

இக்குழந்தை, நவம்பர் மாதம் சளி தொல்லை, மூச்சுத்திணறல் மற்றும் தாய்ப்பால் குடிக்க முடியாமல் அவதிப்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேல் சிகிச்சைக்காக நவ.,27ல், பெங்களூரு நாராயணா இருதாலயா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது, குழந்தைக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது.

இதை குணமாக்க, அமெரிக்காவிலுள்ள நோவார்டிஸ் என்ற மருந்து நிறுவனத்தில் இருந்து, 16 கோடி ரூபாய்க்கு தடுப்பு மருந்து வரவழைக்க வேண்டும். ஆனால், அதற்கு தேவையான தொகை சக்திவேலிடம் இல்லை.

தற்போது குழந்தைக்கு பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனை, ஐ.சி.யு., பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு நாளொன்றுக்கு, 22,000 ரூபாய் வரை செலவாகிறது. இதுவரை மொத்தம், 15 லட்சம் ரூபாய் வரை சக்திவேல் செலவு செய்துள்ளார்.

கம்பெனி இன்சூரன்ஸ், உறவினர்கள் உதவி, சேமிப்பு என, தன்னிடமிருந்த பணத்தை வைத்து சமாளித்து விட்டார். தற்போது தொடர் சிகிச்சையளிக்கவும், நோய்க்கான தடுப்பு மருந்தை வாங்கவும், சக்திவேலிடம் பணம் இல்லை.

இதனால், தமிழக முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு, இ - மெயில் மூலம் மனு அனுப்பியுள்ளார். அரசு தரப்பில் இன்னும் உதவி கிடைக்கவில்லை. அதனால், தடுப்பு மருந்தை பெற, குழந்தையின் பெற்றோர் உதவி எதிர்பார்க்கின்றனர்.

கூடிய விரைவில் குழந்தை ஷத்விகாவிற்கு தடுப்பு மருந்து செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், இடுப்புக்கு கீழுள்ள பாகங்கள் செயலிழந்து விடும் அபாயம் உள்ளது. உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள், 88920 10400, 90923 73681 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us