56 வயதில் இளைஞர் என்று கூறி கொள்பவருக்கான காலம் அல்ல; பிரதமர் மோடி விமர்சனம்
56 வயதில் இளைஞர் என்று கூறி கொள்பவருக்கான காலம் அல்ல; பிரதமர் மோடி விமர்சனம்
UPDATED : ஜூலை 20, 2026 11:30 AM
ADDED : ஜூலை 20, 2026 10:40 AM

புதுடில்லி: ''இது இளைஞர்களின் காலம். 56 வயதில் இளைஞர் என்று கூறி கொள்பவருக்கான காலம் அல்ல, 28 வயதான இளைஞர்கள் விக்ரம்-1 திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போதைய பார்லிமென்ட் கூட்டத்தொடர் முக்கியம். கூட்டத்தொடர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். பருவமழையும், மழைக்கால கூட்டத்தொடரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மிகப்பெரிய பெருமை
விக்ரம்1 திட்டம் வெற்றி வரலாற்று சாதனை. இந்த திட்டம் வெற்றி இந்தியர்களுக்கு மிகப்பெரிய பெருமை. இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப்கள் சாதனைகள் படைத்து வருகின்றன. விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை எல்லாம் நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது என்பதை பிரதிபலிக்கிறது.
சவால்கள்
விண்வெளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகின்றனர். உலகிலேயே சக்தவாய்ந்த ஹைட்ரஜன் ரயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள சவால்களை இந்தியா திறம்பட சமாளித்தது. இந்த போர் இந்தய வளர்ச்சியை தடுக்கவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ராகுலை விமர்சித்த மோடி!
'ஸ்கைரூட்' எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்தக் குழுவின் சராசரி வயது வெறும் 28 வயது மட்டுமே என்று என்னிடம் கூறப்பட்டது. இத்தகைய இளைஞர்களே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். நான் 56 வயதுடைய ஒரு இளைஞரைப் பற்றிப் பேசவில்லை. 56 வயதில் இளைஞர் என்று கூறி கொள்பவருக்கான காலம் அல்ல.
வெறும் ஒரு மாத காலத்திற்குள், நாடு பல மைல்கற்களை எட்டியுள்ளது; ஒவ்வொரு மக்களும் பெருமிதம் அளிக்கும் சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தியுள்ளது. தேசிய அளவிலோ, சர்வதேச அரங்கிலோ அல்லது இப்போது விண்வெளியிலோ இவை அனைத்தும் இந்தியாவுக்கு உண்மையிலேயே பெருமைக்குரிய தருணங்களாகும்.
கடந்த ஆண்டு பருவமழைக் கூட்டத்தொடருக்கு சற்று முன்பு, ஒரு இந்தியக் குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார். உலகில் மிகச் சில நாடுகளே தனியார் நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்டுள்ளன. இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
