sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 01, 2026 ,பங்குனி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்வு

/

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்வு

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்வு

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்வு

15


UPDATED : ஜன 14, 2026 12:47 PM

ADDED : ஜன 14, 2026 12:44 PM

Google News

UPDATED : ஜன 14, 2026 12:47 PM ADDED : ஜன 14, 2026 12:44 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.

'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், கடந்த மாதம், 26ம் தேதி முதல், சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த உள்ள இடத்தை முன்னதாக அறிவித்தால், போலீசார் தடுத்து விடுகின்றனர்.

எனவே, இடத்தை அறிவிக்காமல், திடீரென காலை ஒரு இடத்தை தேர்வு செய்து, போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், போலீசார் அவர்களை தடுக்க முடியாமல் திணறுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பின் கைது செய்து மாலை விடுவிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து, அவர்களது சொந்த மாவட்டத்திற்கு அழைத்து சென்று அவர்கள் வீட்டில் விட்டனர். அத்துடன் அவர்களை வீட்டு காவலிலும் வைத்தனர்.

சென்னையில் கைது செய்யப்படுவோருக்கு, மதிய உணவு வழங்காமல் மாலை விடுவித்தனர். 'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 19வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 1,000 பேரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனங்களில் ஏற்றிச் சென்று, சென்னைக்கு வெளியே கிளாம்பாக்கம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இறக்கி விட்டனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 14) சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுடன் சென்னையில் அமைச்சர் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது கனத்த இதயத்தை தருவதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.பகுதி நேர ஆசியர்களின் ஊதியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தப்படும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம். பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்த கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம். இவ்வாறு மகேஷ் கூறினார்.

இது தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us