sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டா மாறுதல் புதிய முறை : நாளை முதல் அமலாகிறது

/

பட்டா மாறுதல் புதிய முறை : நாளை முதல் அமலாகிறது

பட்டா மாறுதல் புதிய முறை : நாளை முதல் அமலாகிறது

பட்டா மாறுதல் புதிய முறை : நாளை முதல் அமலாகிறது


ADDED : ஜூலை 31, 2011 01:00 AM

Google News

ADDED : ஜூலை 31, 2011 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டா மாறுதலுக்கான புதிய நடைமுறையை, நாளை (ஆக.1) முதல் நடைமுறைப்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பிக்க, தாலுகா அலுவலகத்திற்குச் செல்லாமல், நேரடியாக வி.ஏ.ஓ.,விடம் அளிக்கலாம் என, அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.



ஒவ்வொரு திங்கட்கிழமையும், பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களை, வி.ஏ.ஓ., பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களில், செவ்வாய்க் கிழமைகளில் மனுக்களைப் பெற வேண்டும். கட்டணம் செலுத்தத் தேவையில்லை. உட்பிரிவு அல்லாத இனங்களுக்கு, மனு கொடுத்த நாளில் இருந்து இரண்டாவது வெள்ளிக்கிழமையும், உட்பிரிவுக்கு உட்பட்ட இனங்களுக்கு, நான்காவது வெள்ளிக்கிழமையும், தாலுகா அலுவலகத்தில் பட்டா பெறலாம்.



ஆதாரம்: பட்டா மாறுதல் மனுவுடன், நிலம் சொந்தம் என்பதற்கு ஆதாரமாகப் பதிவு செய்யப்பட்ட ஆவண நகல்(கிரையம், உயில், தானம், பாகப்பிரிவினை போன்றவை) இணைக்க வேண்டும். இந்த முறை நாளை (ஆக.1) முதல் அமலுக்கு வருகிறது.



- நமது சிறப்பு நிருபர் -








      Dinamalar
      Follow us