ADDED : ஆக 17, 2011 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : ரயில் எஞ்சினில் திடீரென புகை கிளம்பி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் புதுச்சேரி பாசஞ்சர் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக விழுப்புரம் வந்தது.
திருப்பதி- புதுச்சேரி செல்லும் பாசஞ்சர் ரயில் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு வழக்கம் போல் புறப்பட்டு சென்றது. காலை 10 மணிக்கு செங்கல்பட்டு அருகே வந்த போது ரயில் எஞ்சினில் திடீரென புகை ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. உடன், செங்கல்பட்டு ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.பின்னர், மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு, பாசஞ்சர் ரயில் புறப்பட்டு வந்தது. இச்சம்பவத்தால் விழுப்புரத்திற்கு நேற்று பகல் 12.10 மணிக்கு வர வேண்டிய புதுச்சேரி பாசஞ்சர் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக 1.40 மணிக்கு வந்து சேர்ந்தது.