கூலிப்படையை கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்படுத்துங்க; அரசுக்கு சொல்கிறார் திருமா!
கூலிப்படையை கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்படுத்துங்க; அரசுக்கு சொல்கிறார் திருமா!
ADDED : டிச 21, 2024 02:34 PM

சென்னை: 'கூலிப்படையை அரசு கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்படுத்த வேண்டும்' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நெல்லை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பதில்: மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவமாக இது இருக்கிறது. தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று, பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் கூடி இருக்கும் இடத்தில், படுகொலை செய்யும் அளவிற்கான துணிச்சல், கூலிப்படையினரின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த பிரச்னைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.
அரசு தேர்வுகள் பொங்கல் நேரத்தில் நடத்துக்கிறார்கள் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க, பா.ஜ., மற்றும் மத்திய அரசு தயாராக இல்லை. ஏற்கனவே சுட்டிக்காடிய பிறகும், இந்தாண்டும் அவர்கள் அதேயே செய்கிறார்கள். தமிழக மக்களை எந்த அளவுக்கு அவர்கள் அலட்சியம் படுத்துகிறார்கள்.
தமிழக மக்களின் கலாசாரத்தை அவமதிக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இந்த போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் பதில் அளித்தார்.