தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ கியூ.ஆர்., கோடு மூலம் பணம் செலுத்தும்முறை; ரேஷன்கடை பணியாளர்கள் கோரிக்கை

 கியூ.ஆர்., கோடு மூலம் பணம் செலுத்தும்முறை; ரேஷன்கடை பணியாளர்கள் கோரிக்கை

 கியூ.ஆர்., கோடு மூலம் பணம் செலுத்தும்முறை; ரேஷன்கடை பணியாளர்கள் கோரிக்கை


ADDED : ஜூன் 09, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: ரேஷன் கடைகளில் முடங்கியுள்ள கியூ.ஆர்.,கோடு மூலம் பணம் செலுத்தும் முறையை மீண்டும் செல்படுத்த வேண்டும்.

இதனால் சில்லரை பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில பொருளாளர் பொன் அமைதி வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு பொதுமக்கள் பலர் சரியான சில்லரை வழங்குவதில்லை.

இதனால் விற்பனையாளர்கள், பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காண சில ஆண்டுகளுக்கு முன் சோதனை அடிப்படையில் அரசு சார்பில் கியூ.ஆர்., கோடு வழங்கப்பட்டது.

அதில் பணம் செலுத்தினால் கூட்டுறவு சங்க வங்கி கணக்கிற்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் அதிகாரிகள் அதை முழுமையாக செயல்படுத்தாமல் முடக்கி விட்டனர்.

எனவே கியூ.ஆர்., கோடு வழங்கி அதன் மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்தி சில்லரை பிரச்னைக்கு தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us