'பென்ஷன்' திட்டம்: கருப்பு 'பேட்ஜ்' அணிந்து அரசு ஊழியர்கள் எதிர்ப்பு
'பென்ஷன்' திட்டம்: கருப்பு 'பேட்ஜ்' அணிந்து அரசு ஊழியர்கள் எதிர்ப்பு
ADDED : அக் 07, 2025 06:42 AM

சென்னை : ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கருப்பு 'பேட்ஜ்' அணிந்து, தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் பணிபுரிந்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட் டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.
இந்த மூன்று திட்டங் களில் சிறந்ததை தேர்வு செய்ய, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான மூன்று நபர் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த குழு, செப்டம்பர் 30ம் தேதி, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், இடைக்கால அறிக்கை மட்டும் தாக்கல் செய்து, மறைமுகமாக கால நீட்டிப்பை பெற்றுள்ளது.
இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசுக்கும், குழுவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலைமை செயலக சங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து நேற்று பணிபுரிந்தனர்.