மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கிறார்கள்: இ.பி.எஸ்.,
மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கிறார்கள்: இ.பி.எஸ்.,
UPDATED : மார் 23, 2024 03:13 PM
ADDED : மார் 23, 2024 03:11 PM

சேலம்: '' மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கிறார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான் கட்சி வளரும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
சேலத்தில் நிருபர்களைச் சந்தித்த இ.பி.எஸ்., கூறியதாவது: மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கிறார்கள். தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான் கட்சி வளரும். எப்போதும் கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்கிறோம். வரவில்லை என்றால் கவலையில்லை.
அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. நிறைய திட்டங்களை நாட்டு மக்களுக்கு செய்துள்ளோம். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். பா.ம.க., வேடந்தாங்கல் பறவை போன்றது. அடிக்கடி கூட்டணி மாற்றும். தமிழகத்தில் பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

