ADDED : ஜன 09, 2024 12:50 AM

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு கண்காட்சி அரங்குகளை, வரும் 11, 12 ஆகிய தேதிகளில், பொது மக்கள் பார்வையிடலாம்.
தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான 'டிட்கோ' மேலாண் இயக்குனர் சந்தீப் நந்துாரி கூறியதாவது:
தமிழகத்தின் தொழில் சூழல், தொழில் பலம் குறித்து முதலீட்டாளர்களும், வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும், கல்லுாரி மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு வசதியாக, தொழில்துறை சார்பில், விருச்சொல் எனப்படும் மெய்நிகர் காட்சி தொழில்நுட்ப அரங்கு, உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அரங்கிற்கு வரும் பார்வையாளர்கள், மெய்நிகர் எல்.இ.டி., கண்ணாடியை அணிந்து, தமிழகம் முழுதும் உள்ள சிப்காட், டிட்கோ தொழில் பூங்காக்கள், அதில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் துறை பணிகளை பார்க்கலாம்.
மாநாடு நிறைவு பெற்றாலும், கண்காட்சி அரங்குகளை, வரும் 11, 12 ஆகிய இரு தேதிகளில் பார்வையிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.