கனமழை எச்சரிக்கையால் மளிகை பொருட்களை வாங்க குவிந்த மக்கள்
கனமழை எச்சரிக்கையால் மளிகை பொருட்களை வாங்க குவிந்த மக்கள்
UPDATED : அக் 15, 2024 03:24 AM
ADDED : அக் 15, 2024 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் வாழும் மக்கள் வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள், பால், காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்க கடைகளில் கூட்டமாக குவிந்தனர்.
கடந்தாண்டு பெய்த மழையின்போது மக்களின் அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், பால் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் அவதியுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

