ADDED : அக் 30, 2025 06:36 AM

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின், அடையாறு ஆற்று முகத்துவாரத்தை, முதல்வர், சுகாதார அமைச்சர் பார்வையிடுகின்றனர். மழை தொடங்கும் முன், பார்வையிடாமல், தாமதமாக சென்று வெற்று விளம்பரம் செய்கின்றனர்.
சென்னையில் வசிக்கும் மக்கள், மழை வரும் முன், படகு வாங்கி வைத்து கொள்ளுங்கள் என, ஏற்கனவே சொன்னேன்; மீண்டும் அதே ஆலோசனையை கூறுகிறேன்.
டெல்டாவில், கால்வாய் துார்வாராததால், மழையால் 2 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் மூழ்கிவிட்டது. தமிழகம் முழுதும், 30 மணல் குவாரிகளை புதிதாக தொடங்குவதாக, தி.மு.க., அரசு அறிவிக்கிறது.
தேர்தலுக்கு, 6 மாதங்களே உள்ள நிலையில் மணல் குவாரி அறிவிப்பு எதற்கு? கடந்த 2022 - 23ல், மணல் குவாரியில், 4,800 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ள தாக, அமலாக்கத்துறை கூறிய நிலையில், 27 கோடி ரூபாய் மட்டும் வருவாய் கிடைத்ததாக அரசு கூறுகிறது. புதிதாக, மணல் குவாரி தொடங்கினால், நானே களத்தில் இறங்கி போராடுவேன்.
- அன்புமணி
தலைவர், பா.ம.க.,

