sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

 பஸ் நிறுத்தம் பிரச்னையில் 6 மணி நேரம் மக்கள் மறியல்

/

 பஸ் நிறுத்தம் பிரச்னையில் 6 மணி நேரம் மக்கள் மறியல்

 பஸ் நிறுத்தம் பிரச்னையில் 6 மணி நேரம் மக்கள் மறியல்

 பஸ் நிறுத்தம் பிரச்னையில் 6 மணி நேரம் மக்கள் மறியல்


ADDED : ஜன 21, 2026 07:49 AM

Google News

ADDED : ஜன 21, 2026 07:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திமிரி: திமிரியில், பஸ் ஸ்டாண்ட் தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையால், மறியலில் ஈடுபட்ட, 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் இரு ஆண்டுகளுக்கு முன், ஆரணி- -- ஆற்காடு நெடுஞ்சாலையில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் கட்டும் முன், திமிரி நேரு பஜாரில் பஸ்கள் நின்று செல்வது வழக்கம்.

புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டியதால், பஸ்கள் அனைத்தும் நேரு பஜாரில் நிற்காமல், புதிய பஸ் ஸ்டாண்டிற்கு செல்கிறது.

இதனால் பஜார் பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும், பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள பகுதியில் மாற்று சமூகத்தினர் வசிப்பதால், தேவையற்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் கருதினர்.

இந்நிலையில், பழைய இடத்தில் பஸ்கள் நின்று செல்ல பலமுறை அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை நடவடிக்கை இல்லை.

இதனால், ஆவேசமடைந்த வியாபாரிகள், பொது மக்கள் திரண்டு, ஆரணி சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். திமிரி போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சு நடத்தியும், போராட்டத்தை தொடர்ந்ததால், மறியலில் ஈடுபட்ட, 125 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us