யாத்திரையை மக்கள் ஏற்கமாட்டார்கள்: அன்புமணிக்கு சொல்கிறார் ராமதாஸ்!
யாத்திரையை மக்கள் ஏற்கமாட்டார்கள்: அன்புமணிக்கு சொல்கிறார் ராமதாஸ்!
ADDED : ஜூலை 31, 2025 01:24 PM

விழுப்புரம்: கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல் யார் யாத்திரை சென்றாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என 100 நாள் நடைபயணம் மேற்கொண்டு வரும் அன்புமணியை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில், ராமதாஸ் கூறியதாவது: பாமகவின் வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும் தான் இருக்கிறது. ஒரே தலைமை தான், ஒரே தலைவர் தான். தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்படாமல் யார் யாத்திரை சென்றாலும் துளியும் பயனில்லை.
புகார் மனு
தொண்டரும் ஏற்க மாட்டான். மக்களும் ஏற்கமாட்டார்கள். பார்க்க மாட்டார்கள்.
போலீசார் தலைமைக்கும், உள்துறை தலைமைக்கும் எல்லாமும் தெரியும். முறைப்படி புகார் மனு கொடுத்து இருக்கிறோம். பாமக தலைவர் என்ற பெயரோடு, அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும், அதை கேட்காதீர்கள், பதிவு செய்யாதீர்கள்.
பாமகவின் நிறுவனர், தலைவராக தைலாபுரத்தில் இருந்து நான் இதை சொல்கிறேன். ஒட்டு கேட்கும் கருவியை போலீசாரிடம் ஒப்படைத்தோம். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. நம்முடைய சைபர் கிரைம், இந்திய அளவில் திறமையானது. அவர்கள் நினைத்தால், இரண்டே நாட்களில் கண்டுபிடித்து இருக்கலாம்.
தகவல்கள்
எனக்கு இதுவரை அது பற்றிய தகவல்கள் ஏதும் சைபர் கிரைம் துறை மூலமாகவோ, போலீசார் மூலமாகவோ கிடைக்கவில்லை. அதனால் விரைந்து யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்று கண்டுபிடித்து சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.