ADDED : ஜூலை 26, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 133 அடியை எட்டியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்மட்டம் 136 அடியை கடக்கும் வாய்ப்புள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நீர்மட்டம் 133 அடியை எட்டியது.
(மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1867 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5387 மில்லியன் கன அடியாகும்.
நீர்ப்பிடிப்பில் நேற்று பகல் முழுவதும் மழை பெய்ததால் நீர்மட்டம் 136 அடியை கடக்கும் வாய்ப்புள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் முதல் நெல் சாகுபடி மட்டுமின்றி இரண்டாம் போகத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.