‛‛இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்திரத் தீர்வு'': கேட்கிறார் அன்புமணி
‛‛இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்திரத் தீர்வு'': கேட்கிறார் அன்புமணி
ADDED : ஜன 23, 2024 04:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்திரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அன்புமணி கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படைபடையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் நிகழ்வாகி விட்டன. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்திரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

