ஆம்னி பஸ்களுக்கு 'பர்மிட்' வழங்கும் பணி முடக்கம்
ஆம்னி பஸ்களுக்கு 'பர்மிட்' வழங்கும் பணி முடக்கம்
ADDED : ஜூலை 07, 2026 11:33 PM

சென்னை: ஆம்னி பஸ்களுக்கு, புதிய 'பர்மிட்' வழங்குதல், 'பர்மிட்' புதுப்பித்தல் போன்ற பணிகள், 40 நாட்களாக முடங்கி இருப்பதால், 50 புதிய பஸ்கள் உட்பட 450 பஸ்களை இயக்க முடியாத நிலை உள்ளது' என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறிய தாவது: வெளியூர் பயணத்தில், ஆம்னி பஸ்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆனால், ஆம்னி பஸ்கள் இயக்குவதற்கான சேவைகளை, தமிழக போக்குவரத்து ஆணையரகம் உடனுக்குடன் வழங்குவதில்லை.
ஏற்கனவே இருந்த ஆட்சியில், ஒரு பஸ்சை புதிதாக பதிவு செய்து இயக்க வேண்டும் என்றால், ஒரு மாதத்துக்கும் மேல் தாமதம் செய்து வந்தனர். புதிய ஆட்சியிலும், போக்கு வரத்து துறையில் பெரிய மாற்றம் இல்லை. கடந்த 40 நாட்களுக்கு மேலாக, ஆம்னி பஸ்கள் தொடர்பான முக்கிய கோப்புகள் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, ஆம்னி பஸ்களுக்கு, புதிய 'பர்மிட்' வழங்குவது, பர்மிட் புதுப்பிப்பது, உரிமையாளர் பெயர் மாற்றம், பழைய பஸ்சில் இருந்து, புதிய பஸ்ஸுக்கு பர்மிட் மாற்றம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாக நடவடிக்கைகளும், போக்குவரத்து கமிஷனர் ஒப்புதலுடன் மட்டுமே நடக்கும்.
ஆனால், இந்த பணிகள், கடந்த 40 நாட்களாக முடங்கி இருப்பது ஏமாற்றமடைய செய்துள்ளது. இதனால், 450க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
