ADDED : ஜூலை 30, 2011 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழக போலீஸ் தலைமையகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு போலீசின் அதிகாரப்பூர்வ இணையதளமாக (www.tnpolice.gov.in) என்ற இணையதளம் உள்ளது.
இதில் தமிழ்நாடு போலீசின் விவரங்கள், அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளத்தில், காணாமல் போனவர்களின் பட்டியலும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த இணையதளம் மூலமாகவும், பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் கருத்துகளை பதிவு செய்யலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.