sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்

/

முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்

முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்

முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்


ADDED : மார் 01, 2026 05:06 PM

Google News

ADDED : மார் 01, 2026 05:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் முத்துராமலிங்க தேவரின் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீசிய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை; திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

நாடு போற்றும் அருந்தலைவரின் மணிமண்டபத்தில் எந்தவொரு பயமுமின்றி துணிகரமாக குண்டு வீசும் அளவிற்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது வெட்கக்கேடானது. தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன்னிரு கண்களாகக் கொண்டு போற்றிய மாபெரும் தலைவரின் புகழை அழிக்க முயற்சித்த இந்த இழிசெயலைத் தடுப்பதை விடுத்து, முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏவல்துறை மிதந்து கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இனியும் காலதாமதம் செய்யாமல், திமுக அரசு உடனடியாக விழிப்புடன் செயல்பட்டு, முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்திற்குக் களங்கம் ஏற்படுத்த முனைந்த சமூக விரோதிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறியல்

திருநெல்வேலி திம்மராஜபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவப்படத்திற்கு மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் அரசு பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.








      Dinamalar
      Follow us