ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையா! ஐகோர்ட் போட்ட 'ஆர்டர்'
ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையா! ஐகோர்ட் போட்ட 'ஆர்டர்'
ADDED : செப் 11, 2024 12:53 PM

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வருமாறு தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையின் போது பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வந்தால் அதன் விலை கணிசமாக குறையும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட், ஜி.எஸ்.டி.,க்குள் சேர்க்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க அவகாசம் அளிப்பதாக கூறியது.
ஏற்கனவே கேரள ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் தற்போது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட், 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.