குழாய் உடைப்பு: 25 அடி உயரத்துக்கு பீச்சி அடித்த தண்ணீர்
குழாய் உடைப்பு: 25 அடி உயரத்துக்கு பீச்சி அடித்த தண்ணீர்
ADDED : பிப் 23, 2024 09:53 PM

கூடலூர்: கோழிக்கோடு சாலையில், பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணானது
நீலகிரி மாவட்டம், கூடலூர் கோழிக்கோடு சாலை, இரும்புபாலம் பகுதியில் உள்ள பாண்டியார் - புன்னம்புழா குடிநீர் திட்டத்திலிருந்து, கூடலூர் நகராட்சியில் உள்ள பல வாடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். இன்று, இரவு 7:00 மணிக்கு கோழிக்கோடு சாலை நந்தட்டி அருகே, பிரதான குடிநீர் குழாய் உடைந்து, 25 அடிஉயரம் வரை தண்ணீர் பீச்சி அடித்து, தண்ணீர் சாலையில் வழிந்தோடியது. வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு அப்பகுதியை கடந்து சென்றனர்.
தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள், குடிநீர் சப்ளையை நிறுத்தினர். ஆனாலும், தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வீணானது. ஒரு மணி நேரத்துக்கு பின் தண்ணீர் வெளியேறுவது நின்றது. நகராட்சி ஊழியர்கள் குழயை சீரமைத்தனர்.
நகராட்சி ஊழியர்கள் கூறுகையில், 'உடைப்பு ஏற்பட்ட பிரதான குழாயில், தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு, உடனடியாக மீண்டும் குடிநீர் சப்ளை வழங்கப்பட்டது' என, கூறினர்.