தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கவுரவ விரிவுரையாளர்கள் 1,000 பேர் நியமிக்க திட்டம்

 கவுரவ விரிவுரையாளர்கள் 1,000 பேர் நியமிக்க திட்டம்

 கவுரவ விரிவுரையாளர்கள் 1,000 பேர் நியமிக்க திட்டம்


ADDED : ஜூன் 20, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக 1,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க, உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

தமிழகத்தில் கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 7,500க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சில மாதங்களுக்கு முன், 1,703 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது, பல கல்லுாரிகளில், புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், பேராசிரியர் பற்றாக்குறை அதிகரித்து உள்ளது.

எனவே, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் வைத்து, நிரந்தரப் பேராசிரியர்களை நியமனம் செய்யும் வரை, கூடுதலாக, 1,000 கவுரவ விரிவுரையாளர்களை புதிதாக நியமிக்க, தமிழக உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us