தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/9,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் மூன்று கட்டங்களாக நிரப்ப திட்டம் அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

9,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் மூன்று கட்டங்களாக நிரப்ப திட்டம் அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

9,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் மூன்று கட்டங்களாக நிரப்ப திட்டம் அமைச்சர் விஸ்வநாதன் தகவல்


ADDED : நவ 24, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசு கல்லுாரிகளில் உள்ள 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை, மூன்று கட்டங்களாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளை சேர்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கான, இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று (நவ.,24) தொடங்கியது. சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், பயிற்சி முகாமை தொடங்கி வைத்து, அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:

கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. மாணவர்களிடம் கல்வித் தகுதியும், பாட அறிவும் உள்ளது. ஆனால், ஆட்சேர்ப்பு நடைமுறைகளை எதிர்கொள்ள முடியாத நிலையில், பலர் உள்ளனர்.

எனவே, வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை தயாரித்தல், கணித திறன் பகுப்பாய்வு திறனை வளர்த்தல், எண்ணங்களை தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்துதல், பிறர் கருத்தை கேட்டு ஆதாரங்களுடன் தங்கள் கருத்தை முன்வைத்தல், மாதிரி நேர்முக தேர்வுகள் வழியாக தன்னம்பிக்கை, உடல்மொழி, தொழில்முறை நடத்தையை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு பயிற்சிகள் வழங்க வேண்டும்.

இவை குறுகிய கால பயிற்சியாக நின்று விடாமல், இரண்டாம் ஆண்டில் இருந்தே தொடங்கி, மாணவர்களின் கல்வி பயணம் முழுதும் தொடர வேண்டும். பேராசிரியர்கள், தொழில் துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு கல்லுாரியும், தொழில் ஆலோசனை குழு அமைக்க வேண்டும். மாநில அளவில், வேலை வாய்ப்புகளையும், மாணவர்களின் திறன் விபரங்களையும் இணைக்கும் ஒரு நம்பகமான இணையதளம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

பல்கலை துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது, தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, 2,700 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நடந்தது; 27,000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், சிலர் வழக்கு தொடர்ந்திருப்பதால், பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் இன்ஜி., பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக உள்ள 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், மூன்று கட்டங்களாக நிரப்பப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us