தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ முக அங்கீகாரம் வாயிலாக ரேஷன் பொருள் வழங்க திட்டம்

 முக அங்கீகாரம் வாயிலாக ரேஷன் பொருள் வழங்க திட்டம்

 முக அங்கீகாரம் வாயிலாக ரேஷன் பொருள் வழங்க திட்டம்

1


ADDED : ஜூலை 14, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 05:50 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''வரும் காலங்களில், 'பேஷியல் ரெககனைசேஷன்' எனப்படும், முக அங்கீகாரம் வாயிலாக, ரேஷன் பொருட்கள் வழங்க திட்டம் உள்ளது,'' என, உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி: சேமிப்பு கிடங்குகள், நெல் கொள்முதல் செய்யப்படும் இடங்களில் ஆய்வு செய்யப்படுகிறது. நெல்லை, அரிசியாக மாற்றும் அரவை ஆலைகளின் உரிமையாளர்களிடம், தரமான அரிசியை வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு மாதத்திற்குள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய அரிசியாக கிடைக்கும். அனைத்து பொருட்களும் தரமாக கிடைக்கும். வரும் காலங்களில் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிலுவையில் இல்லாமல் வ ழங்கப்படும்.

வரும் காலங்களில் முக அங்கீகாரம் வாயிலாக, ரேஷன் பொருட்கள் வழங்க திட்டம் உள்ளது. முதல்வர் விஜயிடம் கேட்டு, தொழில்நுட்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us