ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மாதங்கி காலமானார்
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மாதங்கி காலமானார்
ADDED : அக் 28, 2025 05:23 AM

சென்னை: பிரபல ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.மாதங்கி ராம கிருஷ்ணன், 91 வயது முதிர்வு காரணமாக, சென்னையில் நேற்று காலமானார்.
கடந்த, 1934ல் பிறந்த டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லுாரியில், 15 தங்கப் பதக்கங்களு டன், எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றவர். ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையில் எம்சி. ஹெச்., எனப்படும் உயர் சிறப்பு பட்டம் பெற்ற தமிழகத்தின் முதல் டாக் டர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனையில் தீக்காய சிகிச்சை பிரிவை நிறுவியவர். இவர் கண்டறிந்த திசு புரத பட்டைதான் தற்போதும் தீக்காய சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பத்மஸ்ரீ, பி.சி.ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர்.
இவர், காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனை நிறுவனர், டாக்டர் எம்.எஸ்.ராமகிருஷ்ணனின் மனைவி.
சென்னை நுங்கம்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த மாதங்கி ராமகிருஷ்ணன், வயது முதிர்வால் நேற்று உயிரிழந்தார். அவரது கண்கள், சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
டாக்டர் மாதங்கியின் மகள் பிரியா ராமச்சந்திரன், மருமகன் பி.ராமச்சந்திரன் ஆகியோர் டாக்டர்கள். மாதங்கி மறைவிற்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துஉள்ளார்.

