UPDATED : மார் 01, 2024 10:24 AM
ADDED : மார் 01, 2024 09:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 71வது பிறந்தநாளை கொண்டாடும் அவர் இன்று (மார்ச் 01) சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இவருடன் மூத்த அமைச்சர்கள் பலர் சென்றனர்.
பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ' தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! அவர் நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள்' . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது போல் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மைய தலைவர் கமல், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

