மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: 4ம் தேதி சென்னை வருகை
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: 4ம் தேதி சென்னை வருகை
ADDED : பிப் 28, 2024 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பிரதமர் மோடி மார்ச், 4ம் தேதி சென்னை வருகிறார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், அன்று மாலை 4:00 மணிக்கு தமிழக பா.ஜ., சார்பில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து, சென்னை அமைந்தகரையில் உள்ள பா.ஜ., தேர்தல் அலுவலகத்தில் இன்று மாலை முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில், சென்னையில் உள்ள பா.ஜ.,வின் ஏழு மாவட்ட, மண்டல, அணி மற்றும் பிரிவுகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்குமாறு, அக்கட்சி மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

