ADDED : நவ 29, 2024 07:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பா.ம.க., மத்திய மாவட்டம் சார்பில் கடந்த, 26ல் தமிழக முதல்வரை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'பா.ம.க., நிறுவனர் ராமதாசை யார் தரக்குறைவாக பேசினாலும் வெட்டுவேன்' என, பேசிய கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் ராதாமணி மீது, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் கோவிந்தன் மற்றும் மகளிரணியினர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தனர்.
அதன்படி, பொது ஊழியரை அவமரியாதையாக பேசுதல், பணியை செய்ய விடாமல் தடுத்தல், மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ராதாமணியை கைது செய்தனர்.

