ADDED : டிச 03, 2025 05:55 AM
சென்னை: தேர்தல் கமிஷனை கண்டித்து, பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில், டில்லியில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
பா.ம.க., தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும் என, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோர் அளித்த மனுவை, தலைமை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது.
அதேநேரம், பா.ம.க., தலைவராக, வரும் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. அதனால், பா.ம.க., பெயர், கொடி, சின்னம் ஆகியவை, அன்புமணி தலைமையிலான கட்சிக்கு சொந்தமாகியுள்ளன.
இதை எதிர்த்து, ராமதாஸ் தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில், நேற்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் கமிஷனை கண்டித்து, டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில், நாளை காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதில் ஜி.கே.மணி, அருள், பா.ம.க., செயல் தலைவர் ஸ்ரீ காந்தி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

