சமூகவலை தள கணக்குகளை மீட்டு தாருங்கள்: டி.ஜி.பி.யிடம் புகார் தந்த ராமதாஸ்
சமூகவலை தள கணக்குகளை மீட்டு தாருங்கள்: டி.ஜி.பி.யிடம் புகார் தந்த ராமதாஸ்
UPDATED : ஜூலை 12, 2025 03:12 PM
ADDED : ஜூலை 12, 2025 11:25 AM

சென்னை: தமது சமூகவலை தள கணக்குகளை மீட்டு தரக்கோரி டி.ஜி.பி., அலுவலகத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் புகார் மனு அளித்துள்ளார்.
பா.ம.க.,வில் ராமதாசுக்கும், மகனும், கட்சியின் தலைவரான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு மேலும் மேலும் வலுத்து வருகிறது. இருவரும் பரஸ்பரம் கட்சியின் நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதும் என அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
லண்டனில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி ஒட்டுக் கேட்புக் கருவியை தமது வீட்டில் யாரோ வைத்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டை ராமதாஸ் கூற பா.ம.க., வட்டாரம் பரபரப்பானது. இருவருக்குமான மோதல், விரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கும் சூழலில், தமது சமூகவலை தள கணக்குகளை மீட்டு தரக் கோரி டி.ஜி.பி., அலுவலகத்தில் ராமதாஸ் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள கணக்கு, முகநூல் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றி இருக்கின்றனர். சமூக வலைதள கணக்குகளின் ரகசிய குறியீடுகள் மாற்றப்பட்டு உள்ளன.
ஹேக் செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, தமது வலைதள பக்கங்களை மீட்டு தரவேண்டும் என்று கூறி இருக்கிறார்.

