ADDED : அக் 18, 2025 07:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பா.ம.க., இளைஞர் அணி செயற்குழு கூட்டம், சென்னை அடுத்த சோழிங்கநல்லுாரில் நடந்தது. அக்கட்சி தலைவர் அன்புமணி, இளைஞர் அணித் தலைவர் கணேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு, 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்தை, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை, உடனடியாக நடத்த வேண்டும்.
'வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, வரும் டிச., 17ல் நடக்கும் சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த இளைஞரணி உறுதியேற்கிறது' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.