sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பழனிசாமியுடன் பா.ம.க., அருள் சந்திப்பு: ஜி.கே.மணி பரிதவிப்பு 

/

 பழனிசாமியுடன் பா.ம.க., அருள் சந்திப்பு: ஜி.கே.மணி பரிதவிப்பு 

 பழனிசாமியுடன் பா.ம.க., அருள் சந்திப்பு: ஜி.கே.மணி பரிதவிப்பு 

 பழனிசாமியுடன் பா.ம.க., அருள் சந்திப்பு: ஜி.கே.மணி பரிதவிப்பு 

5


UPDATED : பிப் 18, 2026 03:32 PM

ADDED : பிப் 18, 2026 03:41 AM

Google News

5

UPDATED : பிப் 18, 2026 03:32 PM ADDED : பிப் 18, 2026 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ராமதாஸ் அணி, அன்பு மணி அணி என இரண்டாக, பா.ம.க., பிரிந்துள்ளது. இதில், ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், ராமதாஸ் அணியில் உள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற ராமதாஸ் தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதேநேரத்தில், அன்புமணி தலைமையிலான பா.ம.க.,வினர், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைந்து உள்ளனர்.

அன்புமணிக்கு எதிராக ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டசபையில் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பங்கேற்பதற் காக ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோர் வந்திருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறைக்கு சென்ற அருள், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இதைதொடர்ந்து, அவருடன் 10 நிமிடங்கள் வரை பேசி விட்டு சபைக்கு திரும்பினார். அருளை காணாமல், சபைக்கு வெளியே ஜி.கே.மணி பரிதவித்துக் கொண்டிருந்தார்.

பழனிசாமி அறையில் இருந்து, நேராக சபைக்கு அருள் சென்று விட்டதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜி.கே.மணியும், சபைக்கு வந்து அமர்ந்தார்.

சபை நிகழ்ச்சிகள் முடிந்ததும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன், 10 நிமிடங்கள் வரை ஆலோசித்துவிட்டு, அங்கிருந்து அருள் சென்றார்.






      Dinamalar
      Follow us